Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   124) வருக வருக மகிழ்வுடனே  



வருக வருக மகிழ்வுடனே வருகவே
வரவு என்றும் இனிதாய் அமைகவே
மங்கள நிலவாய் என்றும் திகழ்ந்திட
மன்னவன் அருளுடன் என்றும் வாழ்ந்திட
இந்த வானும் நிலவும் காற்றும் கடலும்
யாழும் இசையும் இதமாய் ஒலிக்க (வருகவே - 2)

சுமையின் பளுவால் சோர்ந்திருப்போரே
சுயநலப் பிடியில் சிதைந்திருப்போரே
இறைமகன் இயேசு அழைக்கிறார்
இதயக் கதவை திறந்து உன்னை அழைக்கிறார்
பணிவாய் அவர் பாதம் நாம் அடைந்திடவே
இந்த வானும் நிலவும் காற்றும் கடலும்
யாழும் இசையும் இதமாய் ஒலிக்க (வருகவே - 2)

ஆபேல் பலியை விரும்பிய தேவன்
ஆபிரகாம் பலியில் நெகிழ்ந்திட்ட தேவன்
நம்மையே அன்பின் பலியாய் கேட்கிறார்
நம்பியே அவரின் பாதம் சேர்ந்திடுவோம்
நலன்களாலே நம் வாழ்வில் நிறைந்திடவே
இந்த வானும் நிலவும் காற்றும் கடலும்
யாழும் இசையும் இதமாய் ஒலிக்க (வருகவே - 2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்