175) பூபாள ராகத்தில் |
பூபாள ராகத்தில் பொன்காலை நேரத்தில் பண்பாடி ஓடி வந்தேன் - உன் பூந்தாளில் என்வாழ்வு தன்வாழ்வைக் கண்டாட பாமாலை சூட வந்தேன் - நான் பாமாலை சூட வந்தேன் எல்லோரும் கொண்டாடும் உன் நாமமே கல்யாணிப் பண்பூவின் மென்வாசமே காண்பாய் நீ உன்னுள்ளம் என்னை என்றாய் காம்போதி நான் பாடி நீயாகினேன் தேன்பாலும் கன்னல்மா இனிதென்பேன் நான் தேவா உன் நாமம் என் உயிரென்பேன் நான் - 2 எத்தனையோ இதயங்கள் உனைப்பாடவே எந்நாளும் உன்தாளில் நின்றேங்குதே இதயத்தின் துடிப்பெல்லாம் உனைப்பாடவே உனைநான் ஆராதனை செய்கின்றேன் தேன்பாலும் கன்னல்மா இனிதென்பேன் நான் தேவா உன் நாமம் என் உயிரென்பேன் நான் - 2 |