83)இறைவனின் இறைகுலமே |
இறைவனின் இறைகுலமே பலிப்பீடம் வாருங்கள் இயேசுவின் திருக்குலமே ஆலயம் வாருங்கள் அருள்வாழ்வில் வளர அருட்சான்று பகர தீபங்களாய் எரிவோம் புதுவாழ்வு மலர நிறைவாழ்வு அடைய ஓர்குலமாய் இணைவோம் கூடுங்கள் ஆலயம் கூடுங்கள் பாடுங்கள் கீதம் பாடுங்கள் வாருங்கள் மகிழ்ந்து வாருங்கள் தாருங்கள் அன்பைத் தாருங்கள் அருள்தரும் இறைவனின் வார்த்தை கேட்போம் அமைதியை அளிக்கும் அவரில் வாழ்வோம் வாழ்வில் உண்மை வழியில் நேர்மை நாளும் தந்திடும் இறையடி பணிவோம் வார்த்தையின் ஒளியினில் வாழ்வை அறிவோம் வானக விருந்தினை அருந்தி மகிழ்வோம் மனதில் அமைதி வாழ்வில் உறுதி என்றும் பெறவே ஆலயம் விரைவோம் |