202) வாருங்கள் நம் இறைவன் |
வாருங்கள் நம் இறைவன் இல்லம் வாருங்கள் வாருங்கள் வாருங்கள் கூடுங்கள் நல் சமூகமாகக் கூடுங்கள் கூடுங்கள் கூடுங்கள் வாருங்கள் நம் இறைவன் இல்லம் வாருங்கள் கூடுங்கள் நல் சமூகமாகக் கூடுங்கள் நம் மீட்பராய் நல் நேசராய் - (2) உறவு கொள்ள வாருங்கள் - அவர் பலிப்பொருளாய் மாறுங்கள் என்றும் பொங்கும் அவரின் அன்பு இல்லம் சேர வாருங்கள் தாங்கும் கரங்கள் நம்மை என்றும் இறுகப் பற்ற வாருங்கள் (2) அழைக்கும் தேவனவன் குரலினைக் கேளுங்கள் அமைதியின் வாழ்வினையே அமைத்திட வாருங்கள் (2) நன்மை கோடி நலன் செழிக்க நாடி வாருங்கள் நலன்கள் யாவும் தந்தவரைப் புகழ்ந்து பாடுங்கள் உண்மை அன்பு உழைப்பு நேர்மை ஓங்கி செழிக்க வாருங்கள் கருணை பொங்கும் அவரின் ஆட்சி நிலைத்து நிற்க வாருங்கள் (2) புனிதம் மலர்ந்திடவே புரட்சிக்குரல் கொடுங்கள் புதியதோர் சமுதாயம் படைத்திட வாருங்கள் (2) புவியில் இறைவன் மாட்சி மலர ஓடி வாருங்கள் புதுமை செய்யும் இறைவனையே பாடி வாருங்கள் |