வருகைப்பாடல்கள் | இறைவனின் அரசில் இணைந்திட |
லல்ல லாலல்ல்லா லல்ல லாலல்ல்லா எழுக எழுக திருக்குலமே -- இறை அருளைப் பொழியும் நல் பலியினிலே இணைவோம் வருவோம் அவரில்லமே - 2 இறைவனின் அரசில் இணைந்திட அழைக்கிறார் இயேசு ஆண்டவர் - 2 இனிமை பொங்கும் இந்த நாளினிலே இறைப்பதம் தனிலே சங்கமிப்போம் எழுக எழுக திருக்குலமே -- இறை அருளைப் பொழியும் நல் பலியினிலே இணைவோம் வருவோம் அவரில்லமே - 2 படைத்துக் காக்கும் நம் பரமன் அன்பினை பாரெங்கும் உரைத்திடுவோம் புதிய வானமும் புதிய வையமும் மலர்ந்திட உழைத்திடுவோம் - 2 இயேசுவின் சாட்சியாய் என்;றுமே வாழுவோம் - 2 எழுக எழுக திருக்குலமே -- இறை அருளைப் பொழியும் நல் பலியினிலே இணைவோம் வருவோம் அவரில்லமே - 2 நீதி நேர்மை என்றும் புவியில் நிலைத்திட இறைவழி நடந்திடுவோம் புதிய பாதையில் புனித வாழ்வினில் சமத்துவம் படைத்திடுவோம் இயேசுவின் சாட்சியாய் என்;றுமே வாழுவோம் - 2 எழுக எழுக திருக்குலமே -- இறை அருளைப் பொழியும் நல் பலியினிலே இணைவோம் வருவோம் அவரில்லமே - 2 |