42) ஆவியில் நிறைந்திட |
ஆவியில் நிறைந்திட மகிழ்ந்திடவே வருகின்றோம் இறைவா ஆவியின் வரங்களும் கிருபைகளும் வலிமையும் தாருமையா (2) அனாதையாய் விடமாட்டார் அறிவீர் நெஞ்சங்களே அனுப்புவார் வான் தந்தை ஆவியைத் துணையாக (2) வள்ளலவர் வரும் போது உள்ளமெல்லாம் தெளிவாகும் எப்போதும் அவர் வசனம் பாதையில் ஒளி காட்டும் (2) காவலில்லா உயிர்போல கலங்காதே என் நெஞ்சே ஆனந்தம் பேரமைதி ஆவியில் நாம் பெறுவோம் (2) |