74) இறைமக்கள் ஒன்றுகூடுவோம் |
இறைமக்கள் ஒன்றுகூடுவோம் - தெய்வ இரக்கத்தை நாம் கொண்டாடுவோம் (2) இதயங்களை எழுப்புவோம் உதயங்களைக் காணுவோம் - 2 இரக்கம் என்னும் நீரூற்றை அள்ளி அள்ளிப் பருகுவோம் 1. படைத்து நம்மைப் பாதுகாக்கும் தந்தையின் இரக்கம் வான் தந்தையின் இரக்கம் உயிரை ஈந்து உலகை மீட்கும் ஆண்டவர் இரக்கம் இயேசு ஆண்டவர் இரக்கம் (2) வரங்கள் பொழிந்து வழிநடத்தும் ஆவியின் இரக்கம் -2 இந்த இரக்கம் என்றும் நிலைத்திடும் இறைவன் அரசு மலர்ந்திடும் -2 அன்பு நீதி அமைதி வழியில் புதிய உலகு படைத்திடும் 2. பாவம் செய்து திரிந்த போதும் தேடிடும் இரக்கம் வந்து தேடிடும் இரக்கம் பாதை தேடி அலையும்போது தொடர்ந்திடும் இரக்கம் தொடர்ந்திடும் இரக்கம் (2) சுமைகளாலே துவளும்போது தாங்கிடும் இரக்கம் -2 இந்த இரக்கப்பெருக்கைப் போற்றுவோம் வியந்து நாமும் வாழ்த்துவோம் (2) வானம் புகழ்ந்து ஆடி மகிழ்ந்து இதய தீபம் ஏற்றுவோம் |