Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் வருக வருக இறைகுலமே  

வருக வருக இறைகுலமே ஆலயம் வருக
பெறுக பெறுக இறையருளை தினமும் பெறுக
இதயங்களைத் திறந்தவராய் இறைப்பதம் வருவோம்
இறைவனையே ஏற்றவராய் இல்லம் செல்வோம்

பதஸப ஸரிஸபபா
இறைவனை ஆலயத்தில் நாமும் வண்ங்குவோம்
இறைவனை மனிதரில் நாமும் காணுவோம்
ஒருவரை ஒருவர் மதித்து வாழுவோம்
பிரிவினை பிளவுகள் பிணக்குகள் தீர்ப்போம்
சமநீதி சமத்துவம் நாம் படைப்போம் உலகிலே (2)
சோதரராய் சேர்ந்து வாழுவோம் என்றுமே


உலகினை ஆலயமாய் நாமும் மாற்றுவோம்
மனதில் ஆலயமாய் நாமும் மாறுவோம்
மனிதரை மனிதர் மதித்திடச் செய்வோம்
மனிதம் மகத்துவம் மாண்பினைக் காப்போம்
அன்பாலே அமைப்போம் இறையாட்சி உலகிலே
நண்பர்களாய் இணைந்து உழைப்போம் மண்ணிலே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்