Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   83)1) இறைவன் நம்மை அழைக்கின்றாரே  


இறைவன் நம்மை அழைக்கின்றாரே
விரைந்து வாருங்கள்
புதிய உலகம் படைத்திடவே
மகிழ்ந்து கூடுங்கள்
இறைவன் அரசு வளந்திடவே
இறை வார்த்தை வழங்கிடவே
இனிதே இணைந்தே சென்றிடுவோம்

தாயின் கருவினிலே நம்மைத் தெரிந்தெடுத்தார்
அவரின் கைகளிலே நம் பெயரைப் பொறித்து வைத்தார்
அவரில் நம்மை அர்ப்பணம் செய்ய
மனித மாண்பு மண்ணில் உயர
எழுவீர் வருவீர் யேசு வழியிலே

அன்புப் பணியினிலே இறைவனின் சொல்லிலே
ஏழை மனிதரிலே இயேசுவைச் காணவே
உண்மை நீதி நேர்மை நிலைக்க
பொய்மை ஜாதி வன்மை அழிக்க
எழுவீர் வருவீர் யேசு வழியிலே

உறவு உரிமைகளை இழந்தவர் கூடி வந்தோம்
மண்ணை மீட்டுத்தர கைகளை நீட்டுகிறோம்
விடியல் ஒன்று தோன்றுமென்றும்
விரைவில் அமைதி மலருமென்றும்
துணிவோம் எழுவோம் யேசு வழியிலே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்