Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  40) ஆனந்தப் பண்பாடுவோம்  


ஆனந்தப் பண்பாடுவோம் - மகிழ்வோம்
ஆண்டவரில் கூடிவருவோம் - 2
அவர் செயலை நினைந்திடுவோம் - நாம்
அவர் பெயரைப் போற்றி மகிழ்வோம் - 2

கண்ணாக மணியாக காப்பாற்றும் ஆண்டவர்க்கு
ஆனந்தப் பண்பாடுவோம் - மகிழ்வோம்
ஆண்டவரில் கூடிவருவோம்
அன்பாலே ஒன்றான இறைமக்கள் நாம்
அருளாலே இணைகின்ற திருக்கூட்டம் நாம் - 2
இந்நாளும் எந்நாளும் அவர் அன்பிலே - 2

இறைக் காட்சி பெறுகின்ற சிறுமந்தை நாம்
மகிழ்வோடு அவர் இல்லம் கூடுகின்றோம்
மனதார நன்றிகள் கூறிடுவோம் - 2
நினைவாலும் செயலாலும் அவர் அன்பிலே - 2
தினம் தோறும் வாழ்கின்ற வரம் வேண்டுவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்