91) இறைவனில் இணைந்திட |
இறைவனில் இணைந்திட வளமுடன் வாழ்ந்திட வாருங்கள் வாருங்கள் - திருப் பலியினில் கலந்திட பரமனில் நிறைந்திட கூடுங்கள் கூடுங்கள் - 2 என்றும் இறைவனில். அன்பின் சாட்சியாய் நாளும் வாழ்ந்து அவரின் உறவிலே மலர்ந்திடுவோம் - 2 நம்மை படைத்த இறைவன் புகழ்பாடி மகிழ்ந்திட பாரில் அவர் நாமம் போற்றிப் புகழ்ந்திட அனைவரும் விரைவோம் ஆனந்தமுடனே என்றும் இறைவன் ஒளியிலே நாமும் இணைந்து தியாகச் சுடர்களாய் ஒளிர்ந்திடுவோம் - 2 இறை வார்த்தைப் பொழிவிலே நெஞ்சம் நிறைந்திட கருணை மழையிலே வாழ்வும் தழைத்திட அனைவரும் விரைவோம் ஆனந்தமுடனே என்றும் |