கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | வாருங்கள் ஆலயம் வாருங்கள் |
வாருங்கள் ஆலயம் வாருங்கள் இறை மகன் பிறந்து விட்டார் குடிலை நோக்கி குழந்தையை பார்க்க குடும்பமாய் வாருங்கள் காரிருள் மறைந்து பேரொளி இன்று குழந்தையாய் பிறந்தது விண்ணகம் துறந்து மண்ணிலே பிறந்து மழலையாய் தவழ்ந்தது -2 ஆதியில் இருந்த வார்த்தை மகவாய் மலர்ந்ததே - 2 ஆநிரை தொழுவே இன்று அரச மாளிகை ஆனதே - 2 வான தூதர் வந்து வாழ்த்துச் செய்தி சொல்ல வசந்தம் பிறந்தது வாடும் மாந்தர்க்கெல்லாம் வாழ்வின் வழி கிடைக்க விடியல் மலர்ந்தது - 2 விண்ணகத்தில் இன்று மகிமை மண்ணகத்தில் பெரு மகிழ்ச்சி - 2 மாடடை குடிலே இன்று மன்னன் மாளிகை ஆனதே - 2 |