180) மங்கள கீதம் சங்கொலியோடு |
மங்கள கீதம் சங்கொலியோடு மன்னவனே உம் பீடம் வந்தோம் மல்லிகை முல்லை மலர்கள் தூவி மலரடி தொழவந்தோம் - நாம் மலரடி தொழவந்தோம் வாழ்வும் வழியும் ஒளியும் நீரே தாழ்வில் எமது பலமும் நீரே (2) கன்னித் தமிழில் கவிதைகள் புனைந்து - 2 களிப்புடனே உம்மைப் பாட வந்தோம் - 2 உடலை உணவாய் வழங்கிடும் தேவனின் உன்னத பலியில் கலந்திட விழைவோம் (2) உயிர்ப்பும் உயிரும் நானே என்று - 2 உன்னத இயேசுவைப் பாடிடுவோம் - 2 |