3) 2949;ணிதிரள்வோம் |
அணிதிரள்வோம் இறைமக்களே அன்பில் வாழ்வோம் ஓர் குலமாய் அனைத்தும் படைத்து அணைத்துக் காக்கும் அன்புத் தெய்வம் அழைக்கின்றார் எழுந்திடு விரைந்திடு பலியிலே இணைந்திடவே உண்மைச் சுதந்திரம் உரிமை வாழ்வு உலகினில் தருபவரே (2) உன்னையும் என்னையும் உதிரம் சிந்தி உயிர் தந்து மீட்டவரே (2) அழைக்கின்றார் யேசு அழைக்கின்றார் உரிமை வாழ்விற்கு அழைக்கின்றார் உறவை வளர்க்கவே அழைக்கின்றார் உண்மை வழி வாழ அழைக்கின்றார் எழுந்திடு.... விரைந்திடு.... 2 சுமைகள் சுமந்து சோர்ந்தோர்க்கெல்லாம் சுகம் தரும் மருந்தானார் (2) சோதனை வேதனை என்ன செய்யும் சிலுவையின் நிழலினிலே (2) அழைக்கின்றார் யேசு அழைக்கின்றார் திருந்தி வாழவே அழைக்கின்றார் மன்னித்து வாழ அழைக்கின்றார் மனிதம் தழைக்கவே அழைக்கின்றார் எழுந்திடு.... விரைந்திடு.... 2 |