Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  80) இறையன்பில் வாழ  



இறையன்பில் வாழ எழும் இறைகுலமே
இறையருள் பெறவே இணைந்திடுவோம்
இறைவனின் அரசு இகமெங்கும் பரவ
இனிதாய் இணைவோம் திருப்பலி செய்வோம்
எழுவோம் இணைவோம் தருவோம் நமைத் தருவோம் - 2

மனிதரின் உரிமையை மதித்திடவும்
மனிதரின் மாண்பினைப் போற்றிடவும் (2)
எளியவர் ஏற்றங்கள் பெற்றிடவும்
இறைமகன் பலிசெய்ய அழைக்கின்றார் - 2
நாம் எழுவோம்.....

சுயநல அவலங்கள் ஒழிந்திடவும்
சுதந்திர வாழ்வினை அடைந்திடவும் (2)
சுமைகளைச் சுகமாய் மாற்றிடவும்
திருமகன் நம்மை தினம் அழைக்கின்றார் - 2
நாம் எழுவோம்.....



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்