Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  203) விடுதலை இராகங்கள்  



 விடுதலை இராகங்கள் விடியலின் கீதங்கள்
முழங்கிட வாருங்களே!
புது உலகமைத்திட, புது வழி படைத்திட
அன்புடன் வாருங்களே
வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்
அனைவரும் வாருங்களே.... அனைவரும் வாருங்களே!

அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார்
உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் - 2
ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2
சுயநலம் நீக்கி பிறர் நலம் காத்து
அன்பினில் நாம் இணைவோம்!

ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும்
வறுமைப்பிடியிலே அலறும் குடிகளே
இறைவனின் கொடியாகும் - 2
பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் - 2
இறைவனின் அரசில் இனிமையைக் காண
இன்றே முயன்றிடுவோம்!

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்