47) இதய தீபம் ஏற்றுவோம் |
இதய தீபம் ஏற்றுவோம் இந்த நன்நாளிலே இன்னிசை பாடி போற்றுவோம் இனிய தேவனே இந்த அன்பெனும் பாதையிலே வரும் அர்த்தங்கள் ஆயிரமே இந்த சுந்தரசோலையிலே வந்த சொந்தங்கள் ஆயிரமே இவை அத்தனை அழகும் இறைவன் கரங்கள்; இனிது வரைந்த கவிதையே வந்தவையோ சென்றவையோ சொந்தமென்று ஏதுமில்லை கண்டவரோ கொண்டவரோ காலம் சொல்லத் தேவையில்லை கண்னெதிரில் காணுங்கள் கத்தரின் கருணையை அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே புகழ் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்திடு நல்மனமே கற்றவையோ பெற்றவையோ கர்த்தரின்றி ஏதுமில்லை சத்தியமோ சந்நதியோ சாட்சியமும் தேவையில்லை கண்ணெதிரில் காணுங்கள் கத்தரின் கருணையை அத்தனையும் அவர் முன்னே எத்துணை மகிமையே புகழ் சந்தங்கள் பாடியே நெஞ்சங்கள் மகிழ வாழ்திடு நல்மனமே |