109)உம்திரு உள்ளம் |
உம்திரு உள்ளம் நிறைவேற்ற இறைவா வருகின்றேன் உன்னருள் வாக்கைப் பறைசாற்ற - இங்கு என்னையே தருகின்றேன் நானிங்கு பிறருக்கு முன்னே என் தாய் என்னை தரிக்கு முன்னே 2 என்னை நீ தெரிந்தெடுத்தாய் - இன்று என்னையே தருகின்றேன் பலி நீ கேட்கவில்லை பெரும் பொருளும் கேட்கவில்லை 2 எனக்கொரு உடல் தந்தாய் - அதை உனக்கே அளிக்கின்றேன் |