147) நாம் இறை குருகுலம் |
நாம் இறை குருகுலம் மறைபொருள் குருகுலம் இறைவனின் அன்பில் இணைவோமே நானிலம் முழுவதும் இறைவனில் ஒருகுலம் ஆகிட இறைபணி செய்வோமே சிதறிய மந்தையை ஆயனின் தலைமையில் தந்தை முன் ஒன்றாய் சேர்ப்போமே மனப் பிரிவினை மறந்து இறைமகன் யேசுவின் ஓர் உடல் உறுப்பாய் இணைவோமே தூய ஆவியின் கோவிலாகிட மனதில் தூய்மை கொள்வோமே நம் அனைவரும் ஒரே கோவிலாகியே யேசுவே ஆண்டவர் என்போமே புதிய வானமும் புதிய வையமும் புவியினில் புலர்ந்திடச் செய்வோமே நல்ல புதிய செய்தியை புவனம் முழுவதும் பரப்பிட செயல்பட செல்வோமே சிலுவைச் சின்னமே உலகச் சின்னமாய் மாற்றிட அனைத்தையும் இழப்போமே - இறை அன்பின் ஆட்சியே அகில ஆட்சியாய் மலர்ந்திட யாவரும் உழைப்போமே |