Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   159) பாமணக்க நாமணக்க  
பாமணக்க நாமணக்க பண்ணிசையில் பாடி
அருள் மணக்க அறம் மணக்க வரவேற்போம் வருக

வான் சிறக்க வெண்ணிலவு முகில் மேவி வந்தது போல
வருகை தந்த நற்தலைவா வளம் சிறக்க வருக
வான்மீது அணிவகுத்த விண்மீன்கள் போல
வருகை தந்த அடியோரே உளம் மணக்க வருக (பாமணக்க...)

தேன் மணக்க பவளமலர் கரம் குவித்தோம் வருக
செந்தமிழால் வாழ்த்துகிறோம் இறைமகனே வருக
உண்மை வழி வாழ்வின் ஒளி வகுத்தவரே வருக
உவந்து மலர் தூவுகிறோம் திருப்பலியில் வருக (பாமணக்க...)

புலம் பெயர்ந்த தமிழரெல்லாம் அணி செபிக்க வருக
பலமுடனே பணி செய்ய அன்புடனே வருக
நீடு புகழ் உறவுடனே எம் நாட்டுக்காக
நீதி நெறி நீங்காத ஆட்சியினைத் தருக (பாமணக்க...)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்