Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  81) இறையாட்சிக் கனவை  


இறையாட்சிக் கனவை இகமெல்லாம் நனவாக்க
இளமை பொங்கும் உள்ளத்தோடு வருகின்றோம் (2)
இறைவா உம் திருவடியில் ஒருமனமாய் இணைந்து - 2
இதய வீணை சுரங்கள் பாடிப் புகழ்கின்றோம்
புகழ்கின்றோம் புகழ்கின்றோம்
உம்மைப் புகழ்கின்றோம்
தொழுகின்றோம் தொழுகின்றோம்
பணிந்து தொழுகின்றோம் - 2

கரை தேடும் உள்ளத்திற்கு ஓடமாகுவோம் - நாங்கள்
உறவுகளை ஒன்று சேர்க்கும் பாலமாகுவோம் - 2
நீதி அன்பு உண்மைப் பண்பி;ன் சாட்சியாகுவோம் - 2 நாங்கள்
கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வை வாழ்ந்து காட்டுவோம் - 2
புகழ்கின்றோம்.....

மனிதர்களை வாழ்விக்கும் அன்பின் வேதங்கள் - நாங்கள்
உறவுகளை உயிர்ப்பிக்கும் உண்மைச் சீடர்கள் - 2
தூய ஆவி கோவிலாகும் புதிய இதயங்கள் - 2 நாங்கள்
கடவுளையே அப்பா என்று அழைக்கும் பிள்ளைகள் - 2
புகழ்கின்றோம்.....




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்