Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  27) ஆண்டவர் வழியை  


ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்வோம்
அவரின் பாதைகளை செம்மையாய் ஆக்குவோம் (2)
செல்லுவோம் - 2 அவர் வழியில் நாம் செல்லுவோம் - 2

பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவச் செய்வோம்
மலைகள் குன்றுகளெல்லாம் தாழ்த்தி வைப்போம் (2)
கோணலானவற்றை நேராக ஆக்குவோம் - 2
கரடுமுரடானவற்றை சமமான வழிகளாக்குவோம்

மனிதரெல்லாரும் தமது மீட்பைக் காண
கடவுள் வந்துவிட்டார் நம்மைக் கண்டுவிட்டார் (2)
மனம் திரும்புவோம் நற்செய்தி நம்புவோம் - 2
விண்ணரசு நெருங்கிவிட்டது நம்மிடை வந்துவிட்டது



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்