Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   137) திருக்குலமே எழுந்திடுக  
திருக்குலமே எழுந்திடுக
அருன் பொழியும் பலியினிலே
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம்
உன்னதரைப் போற்றுவோம்
ஆயா சந்தோஷம் பெருகிடுதே
அவர் சந்நிதி காண்கையிலே 2

ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் 2
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம்; 2
அவரே நம்மைப் படைத்தார்
அவருக்கே சொந்தம் நாம்
அவர் படைப்புக்கள் நாம் அவர் பிள்ளைகள் நாம்
அவர் மந்தையின் ஆடுகள் நாம்

இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் 2
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம்; 2
அவரைப் புகழ்ந்திடுவோம்
அவர் பெயரை வாழ்த்திடுவோம்
அவர் நல்லவராம் அவர் வல்லவராம்
அவர் அன்பே நம்மை நடத்தும்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்