Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் அழைப்பு இது அருட்குலமே  

அழைப்பு இது அருட்குலமே
புனித பலிக்கான அழைப்பு இது
வாழ்வை அளித்து விட்டேன்
வாழ்ந்து காட்டி விட்டேன்
வழியைச் சொல்லி விட்டேன்
வாழ அழைக்கின்றேன்

சுமை சுமக்கும் தோள்களுக்கு சுகமான அழைப்பு இது
நீர் சுமக்கும் விழிகளுக்கு இதமான அழைப்பு இது
வருந்தும் உள்ளங்களுக்கு மகிழ்வைத் தருகின்ற அழைப்பு இது
மாண்பைத்தேடி இறைமை நாடி உயிர்வாழச் செய்தீர்

இருளான உலகிற்கு ஒளியான அழைப்பு இது
நிலையான வாழ்விற்கு நிறைவான அழைப்பு இது
மறையும் நேயத்திற்கு எழுச்சி தருகின்ற அழைப்பு இது
மாண்பைத் தேடும் இறைமை நாடும் புனித அழைப்பு இது



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்