44) ஆவியிலும் என்றும் உண்மையிலும் |
ஆவியிலும் என்றும் உண்மையிலும் வழிபட வாருங்கள் - இந்த அவனியில் இறைவன் அரசினைக் காணும் ஆனந்தம் பாருங்கள் உலகின் மாந்தர்களே - உங்கள் இதயத்தைத் திறந்திடுங்கள் - 2 இறை வார்த்தையின் பொருள் காணுங்கள் இகம் வாழ்ந்திடும் முறை காணுங்கள் - 2 உலகின் மாந்தர்களே - உங்கள் கரங்களைத் திறந்திடுங்கள் - 2 வறியோருக்கு வழி காட்டுங்கள் வளம் பொங்கிட வகை கூறுங்கள் |