124) மங்கள ஆரத்தி எடுத்தும்மை |
மங்கள ஆரத்தி எடுத்தும்மை அழைத்தோம் குருகுலமே வருக (2) திருப்பலி நிறைவேற்ற வருகவென்றழைத்தோம் குருகுலமே வருக (2) மங்கள ஆரத்தி எடுத்தும்மை அழைத்தோம் இறைமக்களே வருக (2) திருப்பலியினிலே கலந்திட அழைத்தோம் இறைமக்களே வருக (2) இனிய நல் சுவைதரும் திருவிருந்தினிலே மகிழ்வுடன் பங்கெடுப்போம் மீட்பின் பாதையில் நடந்திடும் போது அவர் கரம் பிடித்திடுவோம் (2) மனதினில் அமைதியும் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அவர் தரும் அருள் வரங்கள் (2) இந்த வரங்களைப் பெற்றிடவே திருப்பலியினிலே கலந்திடுவோம் ஆ.....ஆ.... |