20) அன்பு செய்ய எழுவோம் |
அன்பு செய்ய எழுவோம் அகிலம் வெல்ல விரைவோம் இயேசு ஆண்டவர் இன்று தந்திடும் அன்புக்கட்டளையின் அழைப்பினை ஏற்று அன்பு அரங்கேறும் திருநாள் இன்று பணிவு பவனி வரும் பெருநாள் நன்மை யாவும் நல்கும் நாதன் - 2 என்பும் தசையும் ஈந்த பொன்னாள் - 2 பாதம் கழுவி பணிவிடை புரிந்து - 2 பாடம் சொல்லிய தலைவனின் வழியினில் உறவைக் கொண்டாடும் திருநாள் இன்று உள்ளங்கள் இணைந்திடும் பெருநாள் - 2 கிண்ணம் ஒன்றில் எண்ணம் ஒன்றாய் - 2 எல்லா இனமும் பருகும் பொன்னாள் - 2 எண்ணரும் கொடையாய் உன்னத பலியாய் தன்னையே தந்திட்ட தலைவனின் வழியினில் |