Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  45) இணைந்திடுவோம் இறைமக்களே  



இணைந்திடுவோம் இறைமக்களே
இயேசுவின் சந்நிதியில்
சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும்
இயேசுவின் பலியினிலே - இணைவோம்
இயேசுவின் பலியினிலே
கூடிடுவோம் குடும்பமாய்க் கூடிடுவோம்
பாடிடுவோம் இறை சமூகமாய்க் பாடிடுவோம்

மூவொரு கடவுளர் முடிவில்லாப் பிரசன்னம்
குடும்பமாய் இணைகின்றது நம்மைக்
குடும்பமாய் இணைகின்றது
பலியினில் கலந்து உறவினில் இணைய
நம்மையே அழைக்கின்றது - இன்று
நம்மையே அழைக்கின்றது
கூடிடுவோம் குடும்பமாய்க் கூடிடுவோம்
பாடிடுவோம் இறை சமூகமாய்க் பாடிடுவோம்

இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க
பாதை காட்டுகின்றது புதிய
பாதை காட்டுகின்றது
போதனை வென்று சாதனை படைக்க
ஆற்றல் தருகின்றது நமக்கு
ஆற்றல் தருகின்றது
கூடிடுவோம் குடும்பமாய்க் கூடிடுவோம்
பாடிடுவோம் இறை சமூகமாய்க் பாடிடுவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்