199) வாருங்கள் இறைமக்களே கடலலையெனவே |
வாருங்கள் இறைமக்களே கடலலையெனவே வாரீர் - 2 நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக அவர் புகழ் பாடிடுவோம் - நாளும் அவர் வழி வாழ்ந்திடுவோம் சிறு துளி பெருவெள்ளம் ஆகிடுமே எளியவர் நலம்பெற இணைந்திடுவோம் வறியவர் வாழ்வுகள் உயர்ந்திடுமே வறுமையில் அவலங்கள் அகற்றிடுவோம் தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம் வாருங்கள் இறைமக்களே கடலலையெனவே வாரீர் - 2 அருள்மொழி மனதினில் கலந்திடவே கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் மனிதனில் மனிதம் மலர்ந்திடவே எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம் உரிமைகள் உடமைகள் அடைந்திடவே இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம் வாருங்கள் இறைமக்களே கடலலையெனவே வாரீர் - 2 |