19) அன்புக்காய் ஏங்கும் |
அன்புக்காய் ஏங்கும் உள்ளங்களே அன்பர் இயேசுவின் பாதம் வாருங்களே (2) மனிதனின் அன்பு மாறிப் போகும் மனிதனும் நாளை மறைந்து போவான் (2) இயேசுவின் அன்பு மாறாதது இயேசு என்றும் ஜீவிக்கிறார் (2) கல்வாரியில் தியாகம் செய்த இயேசு கள்வரை அன்பினால் நிரப்புகின்றார் (2) பரிசுத்த இரத்தத்தை சிந்தினாரே பரிசுத்தம் நீயும் பெற்றிடவே (2) இயேசு உன் சுமைகளைச் சுமந்திடுவார் இயேசு ஆறுதல் தந்திடுவார் (2) நிலையற்ற வாழ்வில் மயங்கிடாதே நிலையான வாழ்வையே தருவார் இயேசு (2) |