62) இரு கரம் கூப்பி |
இரு கரம் கூப்பி இறையுனைத் தொழுதால் வருந்துயர் எல்லாம் மறைந்திடுமே உறைபனிக்குள்ளே உறைந்த என் உள்ளம் இறைவனே உன்னால் கரையாதோ கறைபடும் வாழ்வு மறைந்திட நாளும்; நிறைவுறும் அன்பே வாராயோ மணங்கமழ் மலரில் தும்பிகள் ஆயிரம் மயங்கியே தேனில் வீழாதோ என்மனம் இருளில் வாழ்ந்தது போதும் இறைவனே உன்னிடம் வாராதோ எண்சாண் உடலும் குறுகிட வன்மனம் உன்தாள் சரணம் அடையாதோ கண்முன் படரும் திரையினை நீத்து உன்முன் என்றும் பணியாதோ |