103) இறைவா உன் பீடம் வந்தேன் |
இறைவா உன் பீடம் வந்தேன் - என்னில் நிறைவாய் உம் அருளைக் கண்டேன் மறைபோற்றும் இறைவா - உன் உரை கேட்கவே - இன்று இறைவா உன் பீடம் வந்தேன் நிலவினில் ஒளியினைப் போல் நெஞ்சம் - உன் நினைவினிலே அதன் உயிர் தஞ்சம் (2) நீர் எந்தன் உயிராய் நினைவென்ற மலராய் நீங்காமல் என்னை நிதம் வைத்துக் காப்பாய் (2) வானத்தில் பறந்திடும் பறவையினம் - போல் வாழ்க்கையில் கவலைகள் எனக்கில்லை (2) வாழ்கின்றேன் உந்தன் வாழ்வைப் பின்தொடர்ந்து வாழ்கின்ற எனக்கு வழியாய் நீ இருப்பாய் (2) |