157) பலி செலுத்திட வாரீர் |
பலி செலுத்திட வாரீர் பரமனின் சந்நிதியில் பாவங்கட்காய் பலியான இயேசுவின் பலி செலுத்திட வாரீர் தேவனின் அன்பினிலே தேங்கிடும் கருணையிலே (2) தேடிடும் உறவையுமே தந்திடும் பலியிதுவே கல்வாரி மலையினிலே கண்ணீர் கதையினிலே (2) தொடங்கிய பலி வாழ்வைத் தொடர்வோம் பலி வழியாய் இறைவனும் மனிதனுமே இணைவதும் கிறிஸ்துவிலே (2) இறைமகன் பலியினிலே இணைவோம் அனைவருமே |