73) இறைமக்கள் அனைவரும் |
இறைமக்கள் அனைவரும் உறவினராக கலந்திடும் நேரமிது இறைமகன் யேசுவின் பலியினில் இணைந்து பயன் பெறும் நேரமிது இறைமகன் அருளிய நல்லுரை கேட்டு மனத்திடம் கொள்வோமே அவர் பரிவுடன் காட்டிய பாதையைத் தொடர்ந்து நடந்திட முயல்வோமே (2) அனுதினம் திருப்பலி காண்பவர் உள்ளம் அமைதியைக் கண்டிடுமே அங்கு அன்பு சமாதானம் என்றும் நிலைத்திட ஆண்டவர் துணை வருமே என் நினைவாகச் செய்யுங்கள் இதனை என்றவர் சொன்னாரே அந்த உன்னத பலியில் தம் உடல் உதிரம் உணவாய்த் தந்தாரே ஆனந்த விருந்தினை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழ்வோமே அந்த வானக வீட்டில் சொந்தம் கொண்டாடும் தகுதியைப் பெறுவோமே |