வருகைப்பாடல்கள் | வானகமும் வையகமும் எங்களோடு சேர |
வானகமும் வையகமும் எங்களோடு சேர வாழ்த்துப் பாடிக் கூடி வந்தோம் தேவனவர் கீதம் வருக வருக இறைக்குலமே அன்பில் நாளும் இணைந்து (2) வாழ்வு தரும் பலியில் இணைய வந்தோம் தந்தாய் பிள்ளைகள் நாங்கள் குழந்தை மனம் வேண்டும் என்று நம் இறைவன் சொன்னார் 2 தன்னுயிரை ஈந்து வானகமும் தந்தார் காலம் கடந்த கடவுள் ஆட்சி என்று வரும் கவலையெல்லாம் அன்றுதானே மறைந்து விடும் கள்ளமில்லா வெள்ளைமனம் அணிந்து கொள்வோமே கடவுள் வழி இன்னதென்று தெரிந்து கொள்வோமே நெஞ்சில் நேர்மை இருந்திடுமானால் செயலில் தூய்மை தெரிந்திடுமானால் இறைவன் ஆட்சி இங்கு மலர்ந்து அயலானுக்கன்பு என்று நம் இறைவன் சொன்னார் 2 எளியோர்க்கு செய்ததெல்லாம் எனக்குச் செய்தீர் என்றார் காலம் கடந்த கடவுள் ஆட்சி என்று வரும் கவலையெல்லாம் அன்றுதானே மறைந்து விடும் பகிர்ந்து வாழ யேசு நமக்கு கற்றுத் தந்தாரே சமதர்ம சமுதாயம் உருவாகவே உண்மை நீதி தெரிந்திடுமானால் அன்பு அமைதி இருந்திடுமானால் இறைவன் ஆட்சி இங்கு மலர்ந்து |