Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   158) பலியிட வந்தோம்  
பலியிட வந்தோம் பரம்பொருளே - நீர்
பக்தரை மீட்ட சக்தியை நினைத்து
பலியிட வந்தோம் பரம் பொருளே
ஏக மகனைக் கொண்டு எமக்கு நீர் செய்திட்ட
ஏதில்லா அன்பினைப் பலியாகச் செலுத்தி - 2

செய்வன திருந்தச் செய்து செயலினில் வெற்றி காண
அகத்தினுள் சேவை மனம் அளித்திட வேண்டி நின்று
நீதி நெறிமுறையில் உமக்கு நற்சான்று கூற
நாடினோம் உமதருள் (பொழிந்திட வேண்டி - 3)

ஒற்றுமையாக நாங்கள் ஓர் குலமாய் சேர்ந்து
ஒன்றிக்கும் நேசமகன் இயேசுவின் பலிவழியாய்
ஞாலமெல்லாம் உந்தன் அன்பினைக் காண
வாழ்வெல்லாம் உழைத்திட (உமதருள் வேண்டி - 3)
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்