வருகைப்பாடல்கள் | வாருங்கள் திருக்குலமே |
சுமைசுமந்து சோர்ந்தவரே சுகம் மறந்த சோதரரே வாழ்வது மாறிட நாடிடுவோம் (2) வாருங்கள் திருக்குலமே இறை தேவனின் பீடத்திலே சுமை சுமந்து சோர்ந்தவரே சுகம் மறந்த சோதரரே வாழ்வது மாறிட நாடிடுவோம் கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம் நல்வாழ்வுப் பலியினைக் கொண்டாடுவோம் பண்பாடுவோம் இன்று பண்பாடுவோம் - அவர் நினைவினைப் பலியினில் பண்பாடுவோம் தன்னையே உடைத்து தியாகமாய்த் தந்த தலைவனின் உன்னத பலியியிது தரணியில் நமையும் சாட்சியாய் மாற்றி அவருக்காய் வாழ பணிக்குது கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம் நல்வாழ்வுப் பலியினைக் கொண்டாடுவோம் பண்பாடுவோம் இன்று பண்பாடுவோம் - அவர் நினைவினைப் பலியினில் பண்பாடுவோம் உண்மையை உரைத்து உறுதியாய் வாழ்ந்த தலைவனின் உன்னத பலியிது அன்பினில் நிலைத்து ஆவியைப் பணித்து அவருக்காய் வாழ அழைக்குது கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம் நல்வாழ்வுப் பலியினைக் கொண்டாடுவோம் பண்பாடுவோம் இன்று பண்பாடுவோம் - அவர் நினைவினைப் பலியினில் பண்பாடுவோம் |