82) இறையாட்சி மலர்ந்திட |
இறையாட்சி மலர்ந்திட - நம்மில் புதுயுகம் புலர்ந்தது நிறைவாழ்வு தொடர்ந்திட - இன்று நம்மையே அழைக்குது நாம் இணைந்தே சென்றிடுவோம் புதிய காவியம் படைத்திடுவோம் (2) நொறுங்கிய மனிதம் உயிர் பெற அழிந்த வாழ்வு வளம்பெற (2) தொலைந்த முகங்கள் உருப்பெற இறைவன் நம்மில் எழுகின்றார் (2) கரங்கள் நீட்டி அழைக்கின்றார் புதிய உலகம் படைக்கின்றார் பகைமை எங்கும் நீங்கிட அன்பில் நாளும் உறைந்திட (2) நிறைவை எங்கும் கண்டிட இறைவன் நம்மில் எழுகின்றார் (2) இணைந்து வாழ பணிக்கின்றார் பிறரில் மகிழ அழைக்கின்றார் |