144) தேவா உன் திருவடியை |
தேவா உன் திருவடியை என்றென்றும் நான் தேடுவேன் நாதா உன் சந்நிதியை தினந்தோறும் நான் நாடுவேன் (2) சுகமான நினைவாலே சுரமான சொல்லாலே - 2 நிதம் உந்தன் பதம் தேடுவேன் - உன் அருளாலே உயிர் வாழுவேன் இருளான உலகத்திலே - நீ ஒளியாக வரவேண்டுமே (2) தடுமாறி தவறாக நான் வாழும் போது வழிகாட்டி எனைக் காக்க வா எனக்காக உயிர் வாழ்பவா ஒளியாக வழியாக உயிராக வந்து எனக்காக உயிர் நீத்தவா கல்வாரி பலியானவா நிலையில்லா உலகத்திலே - நீ நிலை வாழ்வு தரவேண்டுமே (2) பொய்யான சுகம் தேடி நான் வாழும் போது மெய்ஞானம் சுடர் ஆனவா இருள் நீக்கி அருளானவா உயிராக உறவாக நிறைவாழ்வு தந்து இறையாக எனை ஆள்பவா என் இயேசு மனுவானவா |