184) மாற்றங்கள் நிகழும் |
ஆ.ஆ.ஆஆ மாற்றங்கள் நிகழும் மங்களப் பொழுதில் மனங்களை இணைத்து மன்னனைத் தொழுவோம் நேற்றைய பகைமை நினைவுகள் மறந்து நேசங்கள் மகிழ நிறைவினை அடைவோம் அழைத்தவர் துணையில் ஆறுதல் பெறுவோம் - 2 அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே ஆ.ஆ..ஆ.. சுயநலச் சுவடுகள் அழிந்து சுதந்திரத் தடங்களைப் பதிப்போம் புயனிலை மனதினைப் புதைத்து பகிர்ந்திடும் உறவினை வளர்ப்போம் அழுத்தும் நுகத்தடி விலங்குகள் உடைப்போம் அதுவும் இறைபணி என்பதை உணர்வோம் ஆலயம் வருவோம் அன்பினில் இணைவோம் - 2 அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே சாவின் விலங்குகள் உடைத்து சாதனை வாழ்வைக் கொணர்ந்தால் சரிந்தோ சரித்திரம் நிமிரும் சருகினுள் சங்கீதம் ஒலிக்கும் தேய்பிறை ஒன்றும் முடிவுகள் இல்லை தெளிவாய்த் தோன்றும் நிலவின் தொடக்கம் விழுவதால் எழுவோம்.விடியலைத் தொடுவோம் - 2 அச்சங்கள் இல்லை அவர் வழிதனிலே |