Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  97) இறைவனுன் புகழ் பாட  


இறைவனுன் புகழ் பாட - இங்கே
இதயங்கள் பல கோடி
துறையெல்லாம் கடந்தவனே உன்
துணையொன்றை நாம் தேடி

மறைபொருள் ஆனவனே உன்னை
மனங்களில் சிறை வைத்தோம் - 2
குறையுள்ள கோயிலிலே என்னை
கொண்டு நாம் குடி வைத்தோம் (இறைவனுன்)

அன்பு உன் பெயர் அறிவோம் - தூய
அறிவென்றும் நாம் தெரிவோம் - 2
இன்பம் நீ எனத் தெரிவோம் - நல்ல
இரக்கம் நீ என மொழிவோம் - (இறைவனுன்)

சத்தியம் உன் பெயராம் - என
சாற்றுவோம் எம் உயிராம் - 2
நித்தமே உனைப் பணிந்தோம் - உன்
நினைவினில் நாம் களித்தோம் - (இறைவனுன்)


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்