Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   138) திருப்பலியைச் செலுத்திடவே  
திருப்பலியைச் செலுத்திடவே திருப்பணிகள் ஆற்றிடவே
இறைமக்கள் அனைவரும் இணைந்து வாருங்கள் (2)
அன்பு மனம் ஓங்கிடவே - அருள் வாழ்வில் நிலைபெறவே (2)
அனைவரும் ஒன்றாக இணைந்து வாருங்கள்

ஒரே குடும்பமாக வாழும் இல்லம் அமையவே
நமக்கெல்லாம் ஒருவரே தாயும் தந்தையாம் (2)
படைப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் சொந்தம்
பகிர்ந்து வாழும் பண்பு நம் அன்புறவின் பந்தம்
அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வோம் - 2
அவர் வழியில் அவர் துணையில்
இறைவாக்கு உரைத்திட

இறைவார்த்தை வழியில் புது உலகு படைக்கவே
இறையாட்சியே நமது இலட்சியக் கனவாய் (2)
வெவ்வேறு நதிகள் சங்கமிக்கும் கடலில்
வெவ்வேறு மதமும் ஒன்றாகும் வாழ்வில்
பேதங்கள் இல்லை சோகங்கள் இல்லை - 2
அவர் வழியில் அவர் பணியில்
புது உலகு அமைத்திட
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்