Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  21) அன்பு மாந்தர்  



அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்
இறைவன் அழைப்பை ஏற்று அவரில் மகிழுங்கள்
இறையரசின் - அன்பு மாந்தர் அனைவருமே வாருங்கள்

இயேசுவில் நாமும் வாழ்ந்திட வேண்டும்
அவரின் பாதையிலே நாம் நடந்திட வேண்டும்
பாவம் போக்கிட வேண்டும் கோபம் நீக்கிட வேண்டும்
என்றும் - அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் (2)

ஆவியின் வரங்கள் நாம் பொங்கிட வேண்டும்
அவரின் ஆற்றலோடு பணிபுரிய வேண்டும்
மனிதம் மலர்ந்திட வேண்டும் புனிதம் அடைந்திட வேண்டும்
அதனால் - இடைவிடாது நாம் செபிக்க வேண்டும்

ஆயனின் வழியில் நடந்திட வேண்டும்
அவரின் அன்பினிலே நாம் இணைந்திட வேண்டும்
அருளில் நிறைந்திடவேண்டும்
பணியைத் தொடர்ந்திட வேண்டும் - என்றும்
படைத்ததேவன் புகழ் பரப்பிடவேண்டும் - 2

நன்றியின் பலியை செலுத்திட வாரீர்
அவரின் நன்மையை நாம் அடைந்திடவே வாரீர்
இசைப்போம் இன்னிசை மீட்டி
இணைவோம் பரமனின் பலியில் - அதனால்
இறையருளை நாம் அடைவோம் வாரீர் 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்