Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   160) புதிய பாதையில்  
புதிய பாதையில் புறப்பட்டுச் செல்வோம்
நானிலம் எங்கும் புதியதாக்குவோம்
பழையன களைவோம் பாதை மாற்றுவோம்
இயேசுக் கிறிஸ்துவில் புதுப்படைப்பாவோம் (2)

என் வழியாய் அல்லாமல் தந்தையிடம் வருவதில்லை
நானே வழியும் உண்மையும் உயிரும் என்றார் (2)
புனித பாதையில் வாழ்வை அடைந்திட - 2
சென்றிடுவோம் புத்துலகம் படைத்திடுவோம் நாம் - 2

வாழ்பவனும் நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்
அவரின் துணையில் உலகம் எனக்குக் குப்பையாகுமே (2)
இறைசாட்சியாய் வாழ்ந்து காட்டுவோம் - 2
இறை அரசை மண்ணுலகில் நிலை நாட்டுவோம் - 2
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்