வருகைப்பாடல்கள் | நாளிது நல்ல நாளிது |
நாளிது நல்ல நாளிது இறைவன் அருள் தரும் திருநாளிது இன்று மகிழ்வோம் நம்மைப் பகிர்வோம் உறவில் உயர்வடைவோம் பேதமை ஒழிப்போம் பிறர் நலம் காப்போம் பிரிவற்ற சமுதாயம் அமைத்திடுவோம் அருள் தரும் ஆண்டை அறிவிக்கும் பணியை அன்புடனே நாம் செய்வோம் வாருங்கள் இறைமக்களே சேருங்கள் புதுக்குலமாய் புதுயுகம் படைப்போம் புகழ் பெறுவோம் இலட்சியப் பயணம் நிச்சயம் அமையும் உத்தமர் இயேசுவில் உறவாடுவோம் சாட்சிய வாழ்வு நமதாக வேண்டி சரித்திரம் படைத்திட எழுவோம் வாருங்கள் இறைமக்களே சேருங்கள் புதுக்குலமாய் புதுயுகம் படைப்போம் புகழ் பெறுவோம் |