5) அர்ப்பணப்பூக்களை அன்புடன் |
அர்ப்பணப்பூக்களை அன்புடன் ஏந்தி ஆனந்த இல்லம் செல்வோம் - அங்கு ஆயிரம் விளக்குகள் பீடத்தில் ஏந்தி அவருக்கு நன்றி சொல்வோம் உன் பெரும் கருணை நலன்களைச் சுவைத்தோம் உன் திரு நிழலில் அமைதியை உணர்ந்தோம் தடைகளைக் கடக்க உனதருள் அடைந்தோம் நிலையான அன்பிது நிதம் உனைத் தொடர்வோம் நிறைவான நன்றியில் உம்மையே புகழ்வோம் உன்னருள் மொழியில் பலன்களைச் சுவைத்தோம் உன் திருக் கரத்தின் வலிமையை உணர்ந்தோம் அலையென மேவிடும் துயர்களைக் கடந்தோம் அளவில்லா அன்பிது உன்னடி பணிந்தோம் நிறைவான நன்றியில் உம்மையே புகழ்வோம் |