Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  15) அன்பின் பலியில்  
அன்பின் பலியில் அனைவரும் இணைய
ஆவலாய் நாம் வருவோம்
இருளினை அகற்றி ஒளியினை ஏற்றி
வாழ்வினை நாம் பெறுவோம் - நிறை
வாழ்வினை நாம் பெறுவோம்
எழுக எழுக இன்று இறை குலமே
பணிக பணிக என்றும் அவர் பதமே

பிரிவினை பிணக்குகள் நமக்குள்ளே இல்லை
என்பதை உணர்ந்திடுவோம்
யேசுவின் தலைமையில் சங்கமமாவோம்
என்றே வாழ்ந்திடுவோம் - 2
உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதத்தைப் போக்கி
மனிதத்தைக் காத்திடுவோம்
பகைமையை மறந்து பாசத்தை பகிர்ந்து
புனிதராய் மாறிடுவோம் - என்றும்
புனிதராய் மாறிடுவோம்
எழுக எழுக இன்று இறை குலமே
பணிக பணிக என்றும் அவர் பதமே

ஒற்றுமை உணர்வினை உள்ளத்தில் வைத்தால்
உலகமே மகிழ்ந்திடுமே
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டாலே
உறவுகள் மலர்ந்திடுமே - 2
இருப்போர் இல்லார் நிலைமையை நீக்கி
பகிர்ந்திட முன் வருவோம்
தன்னையே தந்து தரணியைக் காத்த
இயேசுவைப் பின்செல்வோம் என்றும்
இயேசுவைப் பின் செல்வோம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்