53) இயேசு என்னும் பெயரைச் |
இயேசு என்னும் பெயரைச் சொல்லி மீட்படைவோமே இயேசுவாக மாறி வாழப் பலி கொடுப்போமே விசுவாசத்துடன் ஒன்றாகி விடுவோம் - நாம் நிறை பலியாம் திருப்பலியை நிறைவேற்றுவோம் தன்னுடலை யேசு கொடுத்துப் பலியானாரே தன் இரத்தம் சிந்தி நம்மை மீட்டு விட்டாரே நினைத்துப் பாருங்கள் - - - - - - 2 வான் தெய்வம் பலியாடாய் மாறிவிட்டது இணைந்து வாருங்கள் அவரோடு நமைச் சேர்த்து பலியாக்கவே - பலியாக்கவே பாவத்திற்காய் மனம் வருந்தி தூய்மையாகுவோம் வாழ்வழிக்கும் அருள் வரத்தைக் கேட்டு மகிழ்வோம் எடுத்து வாருங்கள் - - - - - - 2 வாழ்வினிலே அனுபவித்த இன்ப துன்பத்தை கொடுத்துக் கேளுங்கள் அவர்போல பிறர்க்காக நாம் வாழவே - நாம் வாழவே |