Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   83 அன்பு தீபம் இதயம் ஏந்தி சங்கமமாவோம் )  

அன்புதீபம் இதயம் ஏந்தி சங்கமமாவோம்
அன்பர் இயேசு பலியிணைந்து சரித்திரமாவோம்
அருள்நதி பாயும் இந்த திருப்பலிதனிலே
அரும்பெரும் பலியாய் நமது தியாக பணிகளை
அர்ச்சனைபூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம்.

வார்த்தை வழியிலே வாழ சொல்வதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
நன்மைநெறியிலே நம்மை பகிரவும்
நாளும் நம்மக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
இறைவனே தம்மையே இறைவனே தம்மையே
மனிதர்க்கு அளிக்கும் இணையற்ற பலியின் புனித நிகழ்விலே

நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேய பணியிலே நம்மை இணைப்பதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2
மன்னிக்கும் மனதிலே மகிழ்வை பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்க செய்வதும்
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான்  - 2
அப்பமும் ரசமுமே அப்பமும் ரசமுமே இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நம்மை மறைஉடலாக்கும்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்