Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   151) நெஞ்சம் முழுதும் நன்றியோடு  
நெஞ்சம் முழுதும் நன்றியோடு
தேவன் வாழும் இல்லம் நோக்கி
கரமிசைத்து இணைந்து வாருங்கள்
நம்மைத் தீண்டும் தீமை துன்பம்
கானம் கேட்டு விலகி ஓட
யேசு நாமம் பாடி வாருங்கள் (2)

பறக்கும் பறவை இனங்களே
கடலில் வாழும் மீன்களே
யேசு நாமம் பாடி வாருங்கள்
செடிகளே கிளைகளே
கனி தரும் மரங்களே
யேசு நாமம் பாடி வாருங்கள்

கொழுகொழுத்த ஆடு மாடு
கரும்பு வெல்லம் தானியங்கள்
ஆபேல்போல கொண்டு வாருங்கள்
சாம்பல் பூசி நோன்பிருந்து
நினிவே நகர் மக்கள் போல
மனம் திருந்தி இல்லம் வாருங்கள் (2)
இனிய தேவனாய் இனிக்கும் வார்த்தையால்
அழைத்து காத்திருக்கின்றார்
இணைந்து வாருங்கள் (2)

தேடி வரும் தெய்வமாய்
ஓடி வந்தழைக்கின்றார்
ஆண்டவரின் இல்லம் வாருங்கள்
சேர்ந்து செபிக்கும் கூட்டத்திலே
நிச்சயமாய் அவர் இருப்பார்
ஆவலோடு கூடி வாருங்கள் (2)
இனிய தேவனாய் இனிக்கும் வார்த்தையால்
அழைத்து காத்திருக்கின்றார்
இணைந்து வாருங்கள்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்